\
’யாரெல்லாம் தூண்டிவிட்டவர்கள் என்பதை கண்டறிந்து கைது நடவடிக்கை தொடரும்’ -அமைச்சர் எவ.வேலு

’யாரெல்லாம் தூண்டிவிட்டவர்கள் என்பதை கண்டறிந்து கைது நடவடிக்கை தொடரும்’ -அமைச்சர் எவ.வேலு

’யாரெல்லாம் தூண்டிவிட்டவர்கள் என்பதை கண்டறிந்து கைது நடவடிக்கை தொடரும்’ -அமைச்சர் எவ.வேலு
Published on: 

கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற பள்ளியில் ஆய்வு நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், எவ.வேலு உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பள்ளியில் நடைபெற்ற வன்முறையில் மாணவர்கள் இன்றி விரும்பத்தகாத சில அமைப்பினர் ஈடுபட்டிருந்தால் யாராக இருந்தாலும் அதற்குரிய தண்டனை பெற்றுதான் ஆகவேண்டும். அதை விசாரணைக்குப் பிறகே சொல்ல முடியும் கற்பனையாக எதையும் சொல்ல முடியாது.

இதுவரை மொத்தம் 278 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது நடவடிக்கை தொடரும். இனிமேல்தான் ஸ்பெஷல் டீம் வர இருக்கிறது. அவர்களின் விசாரணையை தொடர்ந்து கைது நடவடிக்கை தொடரும். இந்த வன்முறையில் தொடர்புடையவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டதால் இந்த வன்முறையில் யார் யாரெல்லாம் பின்புலமாக இருக்கிறார்கள். யாரெல்லாம் தூண்டிவிட்டவர்கள், என்பதை கண்டறிந்து இந்த அரசு சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com