`இந்த வழியா போகுமாம்... ஆனா இங்க நிக்காதாம்” - அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

`இந்த வழியா போகுமாம்... ஆனா இங்க நிக்காதாம்” - அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!
`இந்த வழியா போகுமாம்... ஆனா இங்க நிக்காதாம்” - அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

குடியாத்தம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியையடுத்த பூசாரி வலசை பகுதியில், சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசிக்கும் பகுதி வழியாகத்தான் குடியாத்தத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் செல்கின்றன. ஆனால் அவை கிராமத்தில் நிற்காமல் செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. பேருந்து வசதி இல்லாததால் மாணவ மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களை பேருந்து நடத்துனர் அவதூறாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பூசாரி வலசை பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பரதராமி- பூசாரிவலசை சாலையில் நேற்று அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனைர். இதில் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பூசாரி வலசை பகுதியில் உடனடியாக பேருந்து நிழல் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com