
அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 48 மணி நேரத்திற்கு முன்னரே எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த மையத்திற்கு செல்லும் என தெரியவரும் எனவும் தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் எனவும் தெரிவித்தார்.