இப்படியா செய்வது?.. பைக்குடன் சேர்த்து கான்கிரீட் போட்டு சாலை அமைத்த அவலம்!

இப்படியா செய்வது?.. பைக்குடன் சேர்த்து கான்கிரீட் போட்டு சாலை அமைத்த அவலம்!
இப்படியா செய்வது?.. பைக்குடன் சேர்த்து கான்கிரீட் போட்டு சாலை அமைத்த அவலம்!

வேலூரில் சாலை போடும்போது பைக்குடன் சேர்த்து கான்கிரீட் போட்டு சிமெணட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரில் இருக்கும் அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேலூர் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தெருக்களுக்கு தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு திடீரென சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை யுவராஜ் என்பவர் அவரது கடையின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

சாலை அமைக்கும் பணியின் போது அவரது இருசக்கர வாகனத்தையும் வைத்து அதன் மீது சிமெண்ட் சாலை போட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலும் முன்னறிவிப்பு இன்றியும் சாலை போட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com