\
புதுவை: விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருட்டு! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுவை: விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருட்டு! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுவை: விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருட்டு! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Published on

புதுச்சேரியில் விடுதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வெற்றிவேல் என்பவர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதி முன்பாக வாகனத்தை நிறுத்திவைத்து சென்ற நிலையில், வாகனம் திருடுபோயுள்ளது. இதேபோல மற்றொரு வாகனமும் திருடப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நான்கு பேர் சேர்ந்து வாகனங்களை திருடி செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதால், காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com