\
பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற இடத்தில் அஞ்சலி செலுத்தும் துயரம்

பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற இடத்தில் அஞ்சலி செலுத்தும் துயரம்

பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற இடத்தில் அஞ்சலி செலுத்தும் துயரம்
Published on

வீரபாண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தனது பிறந்தநாள் அன்றே மாரடைப்பால் காலமானார்.

சேலம் பூலாவாரியில் உள்ள அவரது வீட்டில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு தயாராகிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரபாண்டி ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். பூலாவாரியில் உள்ள இல்லத்தில் ராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னோடிகளில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான ராஜாவின் மறைவு அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் திறம்பட செய்து முடிக்கக் கூடிய ராஜாவின் மறைவு ஒரு தூண் சாய்வது போல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ராஜாவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com