"வீம்புக்கு வம்பிழுக்கும் பாஜகவினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - திருமாவளவன் காட்டம்

"வீம்புக்கு வம்பிழுக்கும் பாஜகவினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - திருமாவளவன் காட்டம்
"வீம்புக்கு வம்பிழுக்கும் பாஜகவினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" - திருமாவளவன் காட்டம்

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி திடீரென சந்தித்தது பரபரப்பை தொற்ற வைத்திருக்கிறது.

அதன் பிறகு சென்னை டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் திருமாவளவன் எம்.பி. அப்போது, “ஆரணியில் நடந்த சம்பவத்திற்காக விசிகவினர் மீது வழக்குப்பதிந்து கிராமம் கிராமமாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேண்டுமென்றே வீம்புக்கு வம்பிழுக்கும் வகையில் பேசும் பாஜகவினர் மீது காவல்துறையினர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வியே எழுகிறது.

அதனால்தான் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். முன்னாள் ராணுவ வீரரான கர்னல் பாண்டியனை தூண்டிவிடும் அளவுக்கு பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாக இருந்தது.” இவ்வாறு பேசினார்.

ஆரணியில் கடந்த ஜனவரி மாத இறுதியின் போது விசிகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் போலீசாரை இழிவாகி பேசியதற்காக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பாஸ்கரனை கட்சியிலிருந்து மூன்று மாதங்களுக்கு திருமாவளவன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிபி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேசியதன் முழு விவரம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com