4 மாதங்களுக்குப் பின் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு - பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை

4 மாதங்களுக்குப் பின் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு - பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை
4 மாதங்களுக்குப் பின் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு - பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், 4 மாதங்களுக்கு பின் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த சென்னை - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது. சென்னை - கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவையும் இன்று திறக்கப்பட்டன. பார்வையாளர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பார்வையாளர்களும் பூங்கா பணியாளர்களால் வழங்கப்படும் அறிவுரைகளின்படி முகக்கவசம் அணிவது மற்றும் 2 மீட்டர் தூரம் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுகைளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குப் பின் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டதும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பார்வையிட வந்தனர். ஒலி பெருக்கி மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பூங்காவிற்கு வருபவர்களின் பெயர், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, பார்வையாளர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வேனில் சென்று சிங்கங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பேட்டரி வாகனத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்களா என்பதும் உறுதி செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com