'இந்த காரணத்தால்தான் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நிற்கிறார்' - வானதி சீனிவாசன் விமர்சனம்

ராகுல் காந்தியின்‌ தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திப்பது சாதாரண நிகழ்வு. ஆனால், இறுதித் தீர்ப்பு வரும்போதுதான் அவர் குற்றவாளியா, இல்லையா என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.

ராகுல் காந்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தால் தான் அவர் குற்றவாளியா இல்லையா என்பது தெரியும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீதிமன்ற நடவடிக்கைகளில் இடைக்கால தடை என்பது வழக்கமான ஒன்றுதான். வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியதால்தான் ராகுல்காந்தி இப்போது நீதிமன்றத்தில் நிற்கிறார்.

ஒரு சமுதாயத்துக்கு எதிராக, சமுதாய பெயருக்கு எதிராகப் பேசியவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியினர் வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும். ஆக்கப்பூர்வமான மக்கள் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com