\
ஓபாமாவுக்கு பிறகு ஸ்டாலின்தான்: வைகோ

ஓபாமாவுக்கு பிறகு ஸ்டாலின்தான்: வைகோ

ஓபாமாவுக்கு பிறகு ஸ்டாலின்தான்: வைகோ
Published on

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வைகோ, சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது, 9 பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவில் இது போன்று, வேறேங்கும் நடக்கவில்லை எனக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com