உசிலம்பட்டி: 3,000 ஆண்டுகள் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

உசிலம்பட்டி: 3,000 ஆண்டுகள் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

உசிலம்பட்டி: 3,000 ஆண்டுகள் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Published on

உசிலம்பட்டி அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தமிழி எழுத்துக்களுக்கு முந்தைய எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி மொட்டமலை பகுதியில் புலிப்புடவு குகை உள்ளது. அந்த குகையில் தொன்மையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சிவப்பு நிறத்தில் புலி உருவமும், பெண் ஓவியங்கள் மற்றும் புள்ளிகளால் வரையப்பட்ட மனித ஓவியம் மற்றும் வட்டம், சதுரம், செவ்வகம் குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

இந்த குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார். உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால் பல்வேறு தொல்லியல் வரலாறுகளை மீட்டெடுக்கலாம் எனவும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com