தடுப்பூசி போட மறுத்து மரத்தின் மீது ஏறிய நபரை சமாதானப்படுத்தி ஊசி போட்டுவிட்ட ஊழியர்கள்!

தடுப்பூசி போட மறுத்து மரத்தின் மீது ஏறிய நபரை சமாதானப்படுத்தி ஊசி போட்டுவிட்ட ஊழியர்கள்!

தடுப்பூசி போட மறுத்து மரத்தின் மீது ஏறிய நபரை சமாதானப்படுத்தி ஊசி போட்டுவிட்ட ஊழியர்கள்!
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதில் இருந்து தப்பிக்க ஒருநபர் மரத்தின் மீது ஏறிய வீடியோ வெளியாகியுள்ளது.

உ.பி.யில் பாலியா என்ற பகுதியில் சுகாதார துறை பணியாளர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் தடுப்பூசி போட மறுத்து மரத்தின் மீது ஏறினார். பின்னர் சுகாதாரத்துறையினர் அவரை சமாதானப்படுத்தி தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து, தடுப்பூசி போட்டனர்.

அதே போல மற்றொரு நபர், தடுப்பூசி போட மறுத்து சுகாதார துறை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவருக்கும் தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களின் தடுப்பூசிக்கு பயந்து ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com