வீடியோ ஸ்டோரி
சென்னை: கே.ஜி.எஃப். திரைப்பட வசனத்துடன் பட்டாக் கத்தியை சுழற்றி வீடியோ - இருவர் கைது
சென்னை: கே.ஜி.எஃப். திரைப்பட வசனத்துடன் பட்டாக் கத்தியை சுழற்றி வீடியோ - இருவர் கைது
கேஜிஎஃப் திரைப்பட வசனத்திற்கேற்ப நடித்து பட்டாக்கத்தியை சுழற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சென்னையைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த ரஞ்சித், சில மாதங்களுக்கு முன் கத்தியை சுழற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை ரஞ்சித்தின் நண்பரான 17 வயதான சிறுவன் ஒருவர், கே.ஜி.எஃப். திரைப்பட வசனத்தின் பின்னணியில் உருவாக்கி, தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில் வைத்திருந்தார். ஆயுதத்துடன் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியதால், அவர்கள் இருவரையும் அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்தனர்.