சாத்தான்குளத்தில் பைக்கில் சென்றவருக்கு நடந்த சோகம்.. விபத்து நடந்தது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சங்கரன் குடியிருப்பில் வசித்துவந்த செல்வம் என்பவர், இருசக்கர வாகனத்தில் சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் விளக்கு அருகே வந்தபோது நிகழ்ந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏதேனும் வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், தனது குடுபத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தின் மீது மோதியது. இதில். செல்லத்துரையின் மனைவி அய்யபுஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த நகர காவல்துறையினர், மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

