நாமக்கல்: அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல்: அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் ஐக்கியம்
நாமக்கல்: அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் ஐக்கியம்
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இருவர் திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் 11 பேர், திமுகவில் 5 பேர், பாமக சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். இதில் ஆறாவது வார்டு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவராகவும் பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக இருந்த ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த துரைசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இரண்டு பேர், திமுகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 8 ஆக அதிகரித்துள்ளது. தற்போது திமுகவும், அதிமுகவும் சமபலத்துடன் இருப்பதால், வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com