வீடியோ ஸ்டோரி
கோயம்பேடு: தக்காளி விலை 3 மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி
கோயம்பேடு: தக்காளி விலை 3 மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 3 மடங்கு அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த வாரம் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. தென்மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெங்காயம் விலையும் 10 ரூபாய் அதிகரித்து கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வரும் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகமாக இருப்பதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயை தொடும் என கூறப்படுகிறது.