\
Duraimurugan, DK Shivakumar
Duraimurugan, DK ShivakumarPT web

”வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள..”-கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு துரைமுருகன் பதில்

புதிதாக பதவியேற்றுள்ள துணை முதல்வரும் அமைச்சருமான சிவக்குமாருக்கு வாழ்த்து சொல்லலாம் என நினைத்திருந்தேன் அதற்குள் மேகதாது பிரச்னையை கையில் எடுத்துவிட்டார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Published on: 

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரை முருகன்,

”இப்பதான் அவர் வந்திருக்காரு. பார்க்கலாம் சிவக்குமார் அவர்கள், வந்தவுடன் வேறு ஏதாவது பேசுவார் என்று பார்த்தேன். நான்கூட பதவிப் பிரமாணம் எடுத்திருக்குறாரே வாழ்த்து சொல்லாம்னு பாத்தா அதுக்கு முன்னெ இதை எடுத்து பேசியிருக்காரு. இது அண்டை மாநிலத்தோடு இணக்கமாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com