\
திருவள்ளூர்: அத்திப்பட்டு, புதுநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர்: அத்திப்பட்டு, புதுநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர்: அத்திப்பட்டு, புதுநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி
Published on

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு, புதுநகர், சியோன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்த மழை நீர் வடியாததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழை நீர் கால்வாயை தூர்வாரி குடியிருப்புகளை சூழ்ந்த நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு, புதுநகர் பள்ளம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக தண்ணீர் தேங்கும் இந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு முறையும் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும்.

இந்த முறை தொழிற்சாலைகளில் வழியாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரும்பான்மையான தண்ணீரை வெளியேறிய நிலையில், சியோன் நகர், சினிவாசா நகர், அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com