டிக் டாக்கில் தொடங்கி யூ-டியூப்பில் முற்றிய மோதல்: பெண் கைது

டிக் டாக்கில் தொடங்கி யூ-டியூப்பில் முற்றிய மோதல்: பெண் கைது
டிக் டாக்கில் தொடங்கி யூ-டியூப்பில் முற்றிய மோதல்: பெண் கைது

டிக் டாக்-கில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், டிக் டாக்கை தடை செய்த பின்னரும் தொடர்ந்த நிலையில், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் திவ்யா இருவரும் டிக் - டாக் ஆப்பில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தனர். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, இருவரும் யூ டியூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அப்போது இருவருக்கும் வீடியோ மூலம் அவ்வபோது மோதல் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

டிக

தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக திவ்யா மீது சுகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக தேனி சைபர் கிரைம் காவல்துறையினர் திவ்யாவை தேடி வந்தனர். ஆனால், அவர் தேனியிலிருந்து வெளியேறி தஞ்சை, சென்னை, கடலூர், பாண்டிச்சேரி என பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்த திவ்யாவை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com