வீடியோ ஸ்டோரி
’’வாக்கு என்பது உரிமை, அதை விற்கக்கூடாது’’ - அறிவிப்பு பலகையால் அசத்தும் தெக்கூர் கிராமம்!
’’வாக்கு என்பது உரிமை, அதை விற்கக்கூடாது’’ - அறிவிப்பு பலகையால் அசத்தும் தெக்கூர் கிராமம்!
தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற அறிவிப்பு பலகையை ஊர் எல்லையில் வைத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள தெக்கூர் கிராமத்தினர் அசத்தி வருகின்றனர்.
’’வாக்கு என்பது உரிமை அதை விற்கக்கூடாது’’ என்பதை கருத்தில்கொண்டு சிவகங்கை மாவட்டம் தெக்கூர் கிராமத்து இளைஞரணியினரும், மகளிரணியினரும் சேர்ந்து கடந்த இரண்டு தேர்தல்களாக வாக்குக்கு பணம் எதுவும் வாங்காமல் வாக்களித்து வருகின்றனர்.