நீட்தேர்வுக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்: மா.சுப்ரமணியன்

நீட்தேர்வுக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்: மா.சுப்ரமணியன்

நீட்தேர்வுக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்: மா.சுப்ரமணியன்
Published on

நீட் தேர்வுக்கு எதிராக, சட்ட வல்லுநர்களின் பரிந்துரைப்படி கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும் என தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது, இந்த முகாமை ஆய்வு செய்து மதுரையிலிருந்து சென்னை வந்தடைந்த தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவிழாவைப் போல் மக்கள் சாரை சாரையாக வந்து இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 40 ஆயிரம் இடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தி மிகப்பெரிய அளவிலான சாதனையாக 28,9121 ஆயிரம் தடுப்பூசிகளை ஒரே நாளில் போடப்பட்டிருக்கிறது,

இதே அளவிலான தடுப்பூசி முகாம் உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. நமது மக்கள் தொகை அதைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாக இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று இருக்கின்ற இந்த சாதனையானது மகத்தான சாதனையாகும். முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியதுபோல தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு போடுகிற அளவுக்கு நிர்வாக கட்டமைப்பு உள்ளது.  அது இன்றைக்கு மூன்று நான்கு மடங்காக மாறி ஒரு நாளைக்கு இருபத்தி ஒன்பது லட்சத்து வரை போடும் அளவுக்கு நிர்வாகம் கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6.60 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இப்போது 66 சதவீதத்திற்கு மேலாக தடுப்பூசி போடப்பட்டது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இதுகுறித்து மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம்.

மேலும் வாரம் ஒருமுறை இதுபோன்ற மேகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்துவதற்கு கூடுதல் தடுப்பூசிகளை தர வேண்டுமென நாளை ஒன்றிய சுகாதார துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்க உள்ளோம். இது நிச்சயம் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று பல்வேறு இடங்களில் பிற்பகலுக்கு பிறகு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தெரிவித்தனர். குறிப்பிட்ட முகாம்களில் அளவிற்கு அதிகமான மக்கள் வருகையால் இது ஏற்பட்டுள்ளது என்றேன். இப்படி போடப்படாமல் சென்றவர்களை தொலைபேசி மூலமாக அழைத்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இன்று இரண்டாவது தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோவக்சீன் போடப்பட்டது.

நாளை காலை சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் தமிழக முதல்வர் அவர்கள் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். ஏ. கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்கு ஏற்றாற்போல் சட்டவல்லுனர்கள் பரிசளித்தபடி இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா நிச்சயம் வெற்றிகரமாக அமையும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com