வீடியோ ஸ்டோரி
ஏழ்மையிலும் நேர்மை: கீழே கிடந்த ரூ.20 ஆயிரம் பணத்தை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த முதியவர்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழே கிடந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஏரியூரைச் சேர்ந்த தினகரன் என்பவர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பணப்பையை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதேசமயம் காவல் நிலையததிற்கு வந்த முதியவர் ஒருவர், 20 ஆயிரம் ரூபாய் இருந்த பணப்பையை கீழே கிடந்ததாகக் கூறி காவலர்களிடம் ஒப்படைத்தார்.
ஏழ்மையான நிலையில் இருந்த போதிலும், அடுத்தவர் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த முதியவருக்கு சால்வை அணிவித்து காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.