\
இளைஞரை வான்நோக்கி தூக்கிச் சென்ற பட்டம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

இளைஞரை வான்நோக்கி தூக்கிச் சென்ற பட்டம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

இளைஞரை வான்நோக்கி தூக்கிச் சென்ற பட்டம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
Published on
இலங்கையில் இளைஞர் பட்டாளம் நடத்திய பட்டம் விடும் நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது. காரணம் என்ன?
இலங்கையில் பட்டம் பறக்கவிட்ட நபர், வான் நோக்கி தூக்கிச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பருத்தித்துறை-புலோலி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்க விட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், கயிறை பிடித்த இளைஞரும் எதிர்பாராதவிதமாக மேலே தூக்கிச்செல்லப்பட்டார். அருகில் இருந்த மற்ற இளைஞர்கள் கீழே குதிக்குமாறு அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டனர். 40 அடி உயரம் வரை பறந்த இளைஞர், சில நிமிடங்களுக்கு பிறகு கீழே குதித்தார். அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com