\
திருப்பூர்: அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக பொருத்தப்பட்ட இரும்பு ராடு

திருப்பூர்: அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக பொருத்தப்பட்ட இரும்பு ராடு

திருப்பூர்: அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக பொருத்தப்பட்ட இரும்பு ராடு
Published on
திருப்பூரில் பராமரிக்கப்படாத அரசுப் பேருந்தில் கியருக்கு பதிலாக இரும்பு ராடை பொருத்தி இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர் பணிமனைக்கு உட்பட்ட அரசுப் பேருந்து, குமுளி முதல் திருப்பூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு ராடை பொருத்தி ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. கடந்த 50 நாட்களாக இரும்பு ராடு தான் கியராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகத்திடம் கேட்டோது, பேருந்தின் கியரை யாரோ கழற்றி விட்டதால், நீளமான குழாயை பொறுத்தி ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகவும், பேருந்தை சரிசெய்ய பணிமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com