பெண்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்

பெண்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்

பெண்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
Published on
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கான பிடிவாரண்ட்டை நீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து உதவி ஆணையாளர் ஹரிஹரன், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 2 சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத ஹெச்.ராஜாவுக்கு, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். மேலும் வழக்கை வருகின்ற 27.10.2021 -ம் தேதிக்குக்கு ஒத்திவைத்து, அன்று ஹெச்.ராஜா கட்டாயம் ஆஜராக வேண்டும் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com