\
கட்சியை தலைமையேற்று நடத்துங்கள் என சசிகலாவிடம் பேசிய ஆதரவாளரின் காருக்கு தீவைப்பு

கட்சியை தலைமையேற்று நடத்துங்கள் என சசிகலாவிடம் பேசிய ஆதரவாளரின் காருக்கு தீவைப்பு

கட்சியை தலைமையேற்று நடத்துங்கள் என சசிகலாவிடம் பேசிய ஆதரவாளரின் காருக்கு தீவைப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் சசிகலா ஆதரவாளரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலகாவனூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி வின்சென்ட் ராஜா, இவர், கடந்த 8ஆம் தேதி சசிகலாவை செல்போனில் தொடர்பு கொண்டு, கட்சியை தலைமையேற்று நடத்த வருமாறு பேசியதாக தெரிகிறது. இதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், வின்சென்ட் ராஜா காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com