மாடியில் கிரிக்கெட் விளையாடியபோது நிகழ்ந்த விபரீதம்: சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
திருவாரூரில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், மின்கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் நேதாஜி நகரில் உள்ள வீட்டின் மாடியில் நேற்று மாலை சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப்பிடிக்க முற்பட்டுள்ளார். அப்போது மாடியை ஒட்டிச் சென்ற மின் கம்பியில் கை பட்டுவிட்டது. இதையடுத்து சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து மாடியிலிருந்து துடிதுடித்து கீழே விழுந்தான் சிறுவன்.
இதையடுத்து சிறுவன் விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், ஓடிச் சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால், சிறுவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து விட்டார். இந்த காட்சி வெளியாகி பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.