சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு - மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு - மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்
சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு - மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்

சேலம் மாவட்டம் குப்பனூரிலிருந்து ஏற்காடு செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காட்டிற்கு செல்ல இரண்டு பிரதான சாலைகள் உள்ளன. சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன் பட்டி வழியாக செல்லும் சாலையும், குப்பனூர் வழியாக செல்லும் சாலையும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்காடு கிழக்குப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் அடிவாரம் முதல் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்தில், ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பாறைகள் அகற்றப்பட்ட பின்னரே சேதத்தைக் கணக்கிட முடியும் என்று தெரிவித்த ஆட்சியர், இதற்காக பொறியாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த மாதம் சேலத்திலிருந்து ஏற்காடு செல்லக்கூடிய முதன்மைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தச் சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டதால், வாகனங்கள் இனி அந்தச் சாலையில் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பனூர் சாலையில் இதுநாள் வரையில் இதுபோன்று மண்சரிவை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com