\
கோவில் ஓதுவார் பணி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் நியமனம்

கோவில் ஓதுவார் பணி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் நியமனம்

கோவில் ஓதுவார் பணி: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் நியமனம்
Published on

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் ஓதுவார் பணிக்கு பெண் ஒருவர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பணி நியமன ஆணை பெற்ற ஓதுவார் சுஹாஞ்சனா, இறைவன் முன்பு நின்று பாடும் வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அருளாளர்கள் 12 திருமுறைகளை பாடி வேண்டினர். இவர்கள் திருமுறைகளை வழி வழியாக கற்றுக்கொண்டு பாடுகின்றனர்.

பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியை பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி. என்னைபோல் உள்ள பல பெண் ஓதுவார்களுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com