\
” கொலை செய்யும் நோக்கத்தில் மகளை சூடுவைக்கலை”- சிறுமி மகாலட்சுமியின் தாய் கண்ணீர் பேட்டி

” கொலை செய்யும் நோக்கத்தில் மகளை சூடுவைக்கலை”- சிறுமி மகாலட்சுமியின் தாய் கண்ணீர் பேட்டி

” கொலை செய்யும் நோக்கத்தில் மகளை சூடுவைக்கலை”- சிறுமி மகாலட்சுமியின் தாய் கண்ணீர் பேட்டி
Published on

பெரம்பலூரில் சிறுமியொருவர் தாயின் கொடூர தண்டனையால் உயிரிழந்த விவகாரத்தில், தன் மகளை கொலை செய்யும் நோக்கில் அந்த தண்டனைகளை தான் கொடுக்கவில்லை என உயிரிழந்த சிறுமியின் தாய் புதியதலைமுறையிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது 9 வயது மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி, தன் உறவினர் வீட்டிலிருந்து ரூ.70 திருடியதாக அவரது தாயிடம் சிலர் குற்றம் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து அந்தத் தாய் தன் மகளுக்கு தண்டனை கொடுக்க நினைத்து சூடுவைத்துள்ளார். மேலும் மிளகாய் புகையையும் முகரச் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமி உயிரிழந்திருக்கிறார். இறப்புக்கான காரணம் மருத்துவர்களால் உறுதிசெய்யப்படவில்லை எனும்போதும், சிறுமியை மிளகாய் புகையை முகரச்செய்ததாக காரணமென சொல்லப்படுகிறது. சிறுமியின் உடல் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. 

இதைத்தொடர்ந்து சிறுமியின் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அப்படியான சூழலில், குழந்தையின் தாய் நம்மிடையே இன்று பேசினார். அவர் பேசும்போது, “கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் என் மகளுக்கு சூடுவைக்கவில்லை. 80 ரூபாய் திருடியதை கண்டிப்பதற்காகவே வாயிலும் வலது தொடையிலும் சூடுவைத்தேன். மிளகாய் புகையையும் முகரச்செய்தேன். ஆனால் கொலை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” எனக்கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியரும் வரும். அந்த அறிக்கைக்காக காவல் துறையினரும் குழந்தைகள் நல அலுவலர்களும் காத்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com