\
ஊரப்பாக்கம்: வீட்டிற்குள் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்த வெள்ளம்

ஊரப்பாக்கம்: வீட்டிற்குள் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்த வெள்ளம்

ஊரப்பாக்கம்: வீட்டிற்குள் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்த வெள்ளம்
Published on

சென்னையின் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடு ஒன்றிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏரியின் உபரிநீர் வெளியேறுவதால் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஜெகதீஷ் தெருவில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தரை தளத்திற்கும் கீழே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வீட்டின் வரவேற்பறை கால்வாய்போல மாறியுள்ளது. 4 மாடி குடியிருப்பில் கீழ்தளத்திற்கு கீழே வெள்ளம் பாய்வதால் வீடுகளை காலிசெய்துவிட்டு குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com