மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல்

மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல்

மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே திடீர் மோதல்
Published on

மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. மேலும் சில சிறைவாசிகள், சிறை வளாக மதில் மீது ஏறி நின்று சாலையில் கற்களை வீசினர்.

மதுரை - அரசரடி அருகே புதுஜெயில் ரோட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 1,300-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் முதல்தளத்தில் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கும், அண்மையில் அடைக்கப்பட்ட திருச்சியை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதியம் உணவு வேளையின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, திடீரென மோதிக் கொண்டுள்ளனர். கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டுள்ளனர்.

இதில் அச்சமுற்ற பிற சிறைவாசிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, சிறை வளாக மதில் மீதேறி நின்றுள்ளனர். சிலர் தங்களது உடலில் பிளேடால் கீறி காயப்படுத்திக் கொண்டுள்ளனர். சிலர் சாலையை நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதனால் புது ஜெயில் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்களை சிறைக்காவலர்கள் தடுத்தனர். சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ் செல்வம் அவர்களை சமாதானப்படுத்தினார். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்தனர். மோதலில் காயமுற்றோருக்கு சிறை வளாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மோதலை தொடர்ந்து சிறை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com