\
கனடா: தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம் - ரகசிய இடத்தில் ட்ரூடோ

கனடா: தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம் - ரகசிய இடத்தில் ட்ரூடோ

கனடா: தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம் - ரகசிய இடத்தில் ட்ரூடோ
Published on

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டாவா நகரில் ஒரு வாரத்திற்கு முன் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தற்போது வலுத்து வருகிறது.

சரக்கு வாகனங்கள் மூலமாக பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களின் வாகனங்களை ராணுவத்தினர் மடக்கியபோது அவர்கள் ஒரே நேரத்தில் வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com