சென்னையில் காவலர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் காவலர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் காவலர் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 1842-ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 171 ஆண்டாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதன் பின் கடந்த 8 ஆண்டுகளாக காவல் ஆணையர் அலுவலகம் புது கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் பழைய கட்டடம் காவலர் அருங்காட்சிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வைக்கு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மாநகர காவல் துறையினர் பல்வேறு கால கட்டங்களில் பயன்படுத்திய துப்பாக்கிகள், வாகனங்கள், சீருடைகள், வயர்லெஸ் போன்ற கருவிகள் உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 30 ஆம் தேதி வரை இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சிறியவர்களுக்கு 5 ரூபாயும் பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com