கொரோனா தடுப்பு: பள்ளிகளில் மாணாக்கர்கள் செய்யக்கூடியவையும் கூடாதவையும்!

கொரோனா தடுப்பு: பள்ளிகளில் மாணாக்கர்கள் செய்யக்கூடியவையும் கூடாதவையும்!

கொரோனா தடுப்பு: பள்ளிகளில் மாணாக்கர்கள் செய்யக்கூடியவையும் கூடாதவையும்!
Published on

பள்ளிகளில் கொரோனா தடுப்புக்காக மாணவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம்.

பள்ளி வளாகத்தில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை மாணாக்கர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பின் பள்ளிக்கு வருவதை தவிர்த்து, உரிய மருத்துவ உதவியை நாட வேண்டும். குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பிரித்து போட வேண்டும். உணவுக்கு முன்னும், பின்னும் சோப்புகளால் நன்கு கைகழுவ வேண்டும். தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.

பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உரிய கால அவகாசம் வழங்கி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதால், வீணாக மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கண், காது, மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடுதல் கூடாது. உணவுப் பொருட்கள், பேனா, பென்சில் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது. கூட்டம் கூடுவதை தவிர்ப்பதுடன், பிறர் தொட்டு பேசுதலுக்கும் இடம்தரக்கூடாது.

பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கதவுகள், வகுப்பறை கதவுகள் உள்ளிட்ட பகுதிகளை தேவையின்றி தொடுதல் கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் தொற்று பாதிப்புள்ள வீடுகளுக்கு செல்லக்கூடாது. பள்ளி வளாகங்களில் மாணவர்கள் எச்சில் துப்புதல் கூடாது. பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் உட்பட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com