
கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் தங்களது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர்.
இடுக்கியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால் ஆங்காங்கே பேருந்துகள், வாகனங்கள் நீரில் சிக்கி நின்று கொண்டிருந்தன. அப்போது, காரிலிருந்து ஒரு குடும்பத்தினர் இறங்க முயன்றபோது ஒரு சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
அப்போது அருகே நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்த ஓட்டுநரும், நடத்துனரும் தங்களது உயிரை பணயம் வைத்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றி பேருந்துக்குள் அழைத்து வந்தனர்.