\
சிங்கப்பூர்: தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் ரோபோக்கள்

சிங்கப்பூர்: தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் ரோபோக்கள்

சிங்கப்பூர்: தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் ரோபோக்கள்
Published on

சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், தவறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும். புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க மறுப்பவர் ஆகியோர் ரோபோவின் கண்காணிப்பில் இருந்து தப்பமுடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் இரண்டு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அந்த முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிங்கப்பூர் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com