வீடியோ ஸ்டோரி
'மக்களை சாதி, மத ரீதியாக பிரிக்க சிலர் துடிக்கிறார்கள்' - அமைச்சர் சேகர் பாபு
'மக்களை சாதி, மத ரீதியாக பிரிக்க சிலர் துடிக்கிறார்கள்' - அமைச்சர் சேகர் பாபு
மக்களை சாதி, மத, இன ரீதியாக கருத்துவேற்றுமை ஏற்படுத்தி பிரிவினையை உருவாக்க சில சக்திகள் துடிப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை - கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய சேகர்பாபு, ஸ்ரீரங்கம் கோயிலில் நிகழ்ந்தது அநீதி என்று குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், ''மக்களை சாதி, மத, இன ரீதியாக கருத்துவேற்றுமை ஏற்படுத்தி மக்களிடம் பிரிவினையை உருவாக்க சில சக்திகள் துடிக்கின்றன.
இதன் மூலம் தமிழகத்தில் வேரூன்ற நினைக்கும் சக்திகளுக்கு, நாங்கள் பதிலடி கொடுப்போம். தமிழகம் ஒற்றுமையுடன் அமைதிப்பூங்காவாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படியான ஒற்றுமையை சீர்குலைக்க யார் நினைத்தாலும் அவர்களை தேசவிரோதிகளாகத்தான் இந்த அரசு கருதும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.