\
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கோயில்கள் மூடப்பட்டுள்ளன - அமைச்சர் சேகர் பாபு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கோயில்கள் மூடப்பட்டுள்ளன - அமைச்சர் சேகர் பாபு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கோயில்கள் மூடப்பட்டுள்ளன - அமைச்சர் சேகர் பாபு
Published on

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படியே வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ''மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் என் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்; நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படியே கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அபாயம் நீங்கியவுடன் முதல் நடவடிக்கையாக கோயில்கள் திறக்கப்படும்'' என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com