வீடியோ ஸ்டோரி
சிறுமி உயிரிழப்பு எதிரொலி: ஆரணி உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
சிறுமி உயிரிழப்பு எதிரொலி: ஆரணி உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
ஆரணியில் உணவகம் ஒன்றில் பிரியாணி உண்ட சிறுமி உயிரிழந்த நிலையில் 21 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி உண்ட சிறுமி திடீரென உயிரிழந்தார். மேலும், பிரியாணி சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடல் நல பாதிப்புகளுக்கு காரணமான உணவகத்தின் உரிமையாளர், சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த நிலையில் பிற உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்துள்ளனர்.