’ரவுடி துரைமுருகனை கைது செய்ய முயன்ற இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு’ - காவல்துறை

’ரவுடி துரைமுருகனை கைது செய்ய முயன்ற இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு’ - காவல்துறை

’ரவுடி துரைமுருகனை கைது செய்ய முயன்ற இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு’ - காவல்துறை
Published on

தூத்துக்குடியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ரவுடியை கைது செய்ய முயன்ற காவல் ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் காவல்துறையினரை தாக்க முயன்ற ரவுடி என்கவுன்ட்டரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி துரைமுருகன் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முன்னதாக தலைமறைவாக இருந்த அவர் முள்ளக்காடு பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்துள்ளது. இதையடுத்து, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் தனிப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராஜ்பிரபு மற்றும் இரு காவலர்கள் துரைமுருகனை கைது செய்தவதற்காக அங்கு சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் ஆய்வாளர் ராஜ்பிரபு உள்ளிட்ட இருவரை, துரைமுருகன் அரிவாளால் தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால், உதவி ஆய்வாளர் ராஜ்பிரபு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com