கார் விபத்து: முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் நிலை என்ன? வெளிவந்த புதிய தகவல்

காரில் பயணித்த வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேசம் கஷாங் பகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் சென்று கொண்டிருந்த கார் தீடீரென மலையில் இருந்து சட்லெஜ் நதியில் விழுந்தது. இதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலையில் அரங்கேறியுள்ள இவ்விபத்து தொடர்பாக தமிழக காவல்துறைக்கு இமாச்சல காவல்துறையினர் தற்போது தகவல் அளித்துள்ளனர். காரில் பயணித்த வெற்றி துரைசாமி குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கொண்டு அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. விபத்துள்ளான காரை ஓட்டிய ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி துரைசாமியை இமாச்சல பிரதேச காவல்துறையினர் தேடி வரும் நிலையில், தந்தை சைதை துரைசாமி அங்கு சென்றுள்ளார். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதாகவும் அவர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு இமாச்சல் காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைதை துரைசாமி கூறினார். மேலும், மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com