ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதிகோப்பு புகைப்படம்

”எம்.ஜி.ஆர் - நாவலர் நெடுஞ்செழியன் விவகாரத்தில் நடந்தது என்ன?” - இபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்துக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர், ''எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போல் பேட்டி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் எதையெதையோ பேசுகிறார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியிருக்கிறார்.

உடல்நிலை பாதித்த தொண்டரை கட்சியின் தலைவர் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? நான் ஏதாவது தவறாகச் சொன்னாள் என் மீது இபிஎஸ் வழக்கு தொடரட்டும்'' என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com