\
வைகோ மகனுக்கு பொறுப்பு வழங்குவது குறித்து வாக்கெடுப்பு

வைகோ மகனுக்கு பொறுப்பு வழங்குவது குறித்து வாக்கெடுப்பு

வைகோ மகனுக்கு பொறுப்பு வழங்குவது குறித்து வாக்கெடுப்பு
Published on: 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், வைகோவின் மகனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்த வாக்கெடுப்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். வாக்கெடுப்பின் முடிவைப் பொறுத்தே பொறுப்பு வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com