”சமூகத்தில் தொழுநோயாளிகளை புறக்கணிக்கக்கூடாது” - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

”சமூகத்தில் தொழுநோயாளிகளை புறக்கணிக்கக்கூடாது” - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

”சமூகத்தில் தொழுநோயாளிகளை புறக்கணிக்கக்கூடாது” - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில, தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சமூகத்தில் தொழுநோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த, தமிழக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், புதிய கொரோனா குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் மாநில எல்லை பகுதிகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து, மீண்டும் குறையத் தொடங்கும் எனக் கூறினார்.

மூன்று அலைகளிலும் முதியவர்கள் அதிகமானோர் உயிரிழந்திருப்பதை கவனத்தில் கொண்டு, முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com