எழும்பூர் சாலைகளில் அதிகளவில் தேங்கியுள்ள மழை நீர்: மக்கள் கடும் அவதி

எழும்பூர் சாலைகளில் அதிகளவில் தேங்கியுள்ள மழை நீர்: மக்கள் கடும் அவதி

எழும்பூர் சாலைகளில் அதிகளவில் தேங்கியுள்ள மழை நீர்: மக்கள் கடும் அவதி
Published on

சென்னை எழும்பூரில் அதிகளவில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

சென்னையின் முக்கிய சாலையான எழும்பூர் சாலையில் மழைத்தண்ணீர் தேங்கியிருக்கிறது. மேலும், கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் வியாபாரிகள் மழைநீரில் நின்றுகொண்டே வேலைசெய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண மழைக்கே இந்த பகுதியில் மழைநீர் தேங்கிவிடுவதால் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் இங்குள்ள மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று மாநகராட்சி சார்பாக மின்மோட்டார் மூலம் சற்று நீர் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து மழைநீர் தேங்கிவருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com