\
மதுரையில் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி - அலைமோதிய கூட்டம்

மதுரையில் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி - அலைமோதிய கூட்டம்

மதுரையில் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி - அலைமோதிய கூட்டம்
Published on: 

மதுரையில் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி என அறிவிக்கப்பட்டதால் கடையில் கூட்டம் அலைமோதியது.

மதுரையில் தெற்குவாசல் சுகன்யா என்ற நிறுவனம் செல்லூர் பகுதியில் புதிதாக தனது பிரியாணி கடையைத் திறந்திருக்கிறது. கடையை பிரபலம் செய்வதற்காக 5 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு பிரியாணிப் பொட்டலம் வழங்கப்படும் என போஸ்டர்கள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்தது. இதனைப் பார்த்தவர்களில் சுமார் 300 பேர் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை தவிர்த்து கடையின்முன்பு குவிந்தனர். இதனால் அந்த கடை இருக்கும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செல்லூர் காவல்துறையினர் கடை உரிமையாளரை எச்சரித்து விரைவாக பிரியாணி பார்சல்களை விநியோகம் செய்து கடையை மூடிச்சென்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com