டெல்லி: வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் - அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, டெல்லி - ஹரியானா எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, தலைநகர் டெல்லிக்குள் நுழையும் எல்லைப்பகுதிகள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் குவிந்துள்ளதால் டெல்லி எல்லைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ஹரியானா மாநில எல்லையான குருகிராமில் கார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், வார இறுதி விடுமுறை முடிந்து டெல்லியில் பணியிடங்களுக்கு திரும்புவோர் தவித்து வருகின்றனர்