\
கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை: சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்

கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை: சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்

கோயில் குடமுழுக்கு விழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை: சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்
Published on: 

அரியலூர் மாவட்டத்தில் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டானில் உள்ள ஆண்டவர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதில் கடாரங்கொண்டான் பெரியவலையம் கிராமத்திற்கிடையே பிரச்னை உள்ளது. இதுபற்றி ஏற்கெனவே நடந்த பேச்சு வார்த்தையில் இரு கிராமத்தினரும் சேர்ந்து குடமுழுக்கு நடத்த பெரியவலையம் கிராமத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால், இதை ஏற்கமறுத்த கடாரங்கொண்டான் கிராமத்தினர், இன்று குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுபற்றி பெரியவலையம் கிராமத்தினர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் குடமுழுக்கு விழாவை நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமுற்ற கடாரங்கொண்டான் கிராமத்தினர் சிதம்பரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com