அமெரிக்கா: இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்கா: இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்கா: இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
Published on

மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், வெளிநாட்டு வாழ் இந்தியர்களே, இந்தியாவின் பலம் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, குவால்காம், அடோபி, ப்ர்ஸ்ட் சோலார், ஜெனரல் அடாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனையும் பிரதமர் சந்திக்கிறார்.

பின்னர் ஐஸநோவர் செயல் அலுவலகத்தில் இந்திய வம்சாவளியினரான, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக இன்று காலை வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்கிறார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர். சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com